பொதுவாக ஒரு கவிதைத் தொகுதி மீதான விமர்சனம் மட்டுமே வரும். அத்தொகுதியில் சிறப்பாக உள்ள கவிதைகள் பற்றிப் பேசவும்படும். சில வருடம் கழித்து, அக்கவிதைத் தொகுதி கிடைக்காமல் போகலாம். மறுபிரசுரம் இல்லாமலும் போகலாம். அதனால்தான் ஒவ்வொரு விமர்சனத்திற்குப் பின் அத்தொகுதியின் கவிதைகள் சிலவற்றை இணைத்துள்ளேன்.
இக்கட்டுரைகளை வாசித்தபோது, இன்னும் சில கவிதைத் தொகுதிகளைப் பற்றி எழுதியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. எழுதமுடியாததற்கான காரணம், தொடர்ந்து இயங்குவது, எழுதுவது என்பது ஒருவித நோய்த்தன்மையாக எனக்குப்பட்டது. எனவே எழுதவில்லை.
- ராணிதிலக்
Be the first to rate this book.