ஒரு பிசினஸ் வெற்றிகரமாக தொடர்ந்து நடைபெற சின்ன சின்ன மாற்றங்களை காலத்துக்கு ஏற்ப செய்ய வேண்டும். சொந்தமாக தொழில் தொடங்கி அதில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லோரும், தங்களுக்குத் தோன்றும் சிறிய சிறிய ஐடியாக்களால் வெற்றிபெற்றவர்களாகவே இருப்பார்கள். ஒரு பொருளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு புதுப்புது ஐடியாக்கள்தான் கைகொடுக்கும். பொருளின் விளம்பரத்தில் வித்தியாசம், விளம்பர வாசகங்களின் வசீகரம் சேர்த்தல் என இப்படி பலவித ஐடியாக்கள் மூலம் சொந்தத் தொழிலில் வெற்றிகரமாகச் செயல்படலாம். உதாரணமாக ஒரு சூப்பர் மார்க்கெட், ஒரு பொருள் என்றால்கூட வீட்டுக்கு டோர் டெலிவரி உண்டு என்று அழைப்பிதழ் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்குத் தந்ததால் அந்தக் கடையில் பொருள்கள் விற்பனை ஆகின. இப்படி சின்ன சின்ன உத்திகளில் பிசினஸை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம் என்பதைப் பற்றி நாணயம் விகடன் இதழில் வெளியான தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. நீங்களும் உங்கள் பிசினஸில் வெற்றி பெற வைக்கும் ஐடியாக்களை அறிய வாருங்கள்...
Be the first to rate this book.