கேரளத்தின் ஆதிவாசி சமூகமான மலையரையர்களைக் குறித்து ஆதிவாசி ஒருவர் எழுதிய நாவல் இது.
இடுக்கி மாவட்டப் பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள்மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், நாகரிக சமூகம் அவர்களை நடத்தும் விதம் அனைத்தும் இந்தப் புனைவின் அடிப்படைகளாக அமைகின்றன. பழங்குடிய இனத்தைச் சேர்ந்த ஒருவரே இதை எழுதியிருக்கிறார் என்பது இந்த நாவலுக்கு அனுபவத்தின் ஈரத்தையும் உண்மையின் தெளிவையும் அளிக்கிறது.
சாகித்திய அக்காதெமி, கேரள சாகித்திய அக்காதெமி பரிசுகளைப் பெற்ற நாவலின் தமிழாக்கம்.
Be the first to rate this book.