வீட்டிற்குள் பேசிக்கொள்கிற ஜாதிய பேச்சை வெளியில், திமிர்த்தனமாகப் பேசியதால் உருவான விவகாரம்.
பொதுவெளி எல்லோருக்குமானது. அங்கு சொல்லப்படும் கருத்துக்கள், மற்றவர்களிடமிருந்து எதிர்வினைகளை உருவாக்கும். சொல்பவர் பிரமுகராகவேறு இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். பாடகி சின்மயியின் அசட்டுத்தனமான பிராமணீய கருத்துகளுக்கு எதிர்வினையாக முதிர்ச்சியற்ற சிலரிடமிருந்து எழுந்த பாலியல் தாக்குதல்கள் வன்மமாக, தக்க தருணம் பார்த்து உள்ளுறையத் தொடங்கிற்று.
ஒரு லூஸ் டாக் வினையாகிப் போயிற்று. ஒருவன் மீதிருந்த தனிப்பட்ட காழ்ப்பு எல்லோரையும் கோர்த்து, அந்த கும்பலுக்கு அவனே தலைவன் என்கிற பொய்க்கதையை ஜோடித்து, போலீஸ் புகாராகி இருவர் கைதில்போய் முடிந்து. இருவரின் அரசு வேலையும் வாழ்வும் பாடகி சின்மயியால் பறிக்கப்பட்டது.
முகமற்றவர்களின் முகமாகவும் குரலற்றவர்களின் குரலாகவும் ஆன்மாவற்றவர்களின் ஆன்மாவாகவும் செயல்படுவனே எழுத்தாளன் என்கிற அறச்சீற்றத்தில், விவகாரம் நிகழ்ந்து கொண்டிருக்கையிலேயே, தொடராக எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.
Be the first to rate this book.