வறுமை ஒழிப்பிற்காக மக்கள் சீன அரசாங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியும் வகுத்த திட்டங்களையும், நடவடிக்கைகளையும் பற்றிய துல்லியமான விபரங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அரசாங்கம் உருவாக்கிய கட்டமைப்புகள் காரணமாக ஒரு பகுதியினர் தாங்களாகவே வறுமையில் இருந்து மீண்டுள்ளார்கள். அது அல்லாமல், 85 கோடி சீன குடிமக்கள், அரசின் குறிவைத்த திட்டங்களால் தீவிர வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள். ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிட்ட சீன அரசு குறிவைத்த தீவிர வறுமை ஒழிப்பிற்கும் திட்டத்தை உருவாக்கி அமலாக்கியது. குறிப்பாக, கல்விஅளித்தல், சுகாதார வசதிகள் ஏற்படுத்துதல், உணவு, உடை வழங்குதல், பாதுகாப்பான வீடுகளையும், சுத்தமான குடிநீரையும் உறுதி செய்தல் மற்றும் உத்திரவாதமான வருமானம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை இலக்குகளை பூர்த்திசெய்வதின் மூலமே தீவிர வறுமை நிலைமை ஒழிக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.