முதலாளித்துவ மேற்கு நாடுகளுக்கு பொதுஉடைமைக் கொள்கைகள் அச்சுறுத்தலாக இருந்தன. அதனால் பொதுஉடைமையைப் பற்றிய தவறான கருத்துகளையே மேற்கு நாடுகளின் ஊடகங்கள் காண்பித்து வந்தன. 1930களில் சீனாவின் செம்படை வீரர்களைச் ‘சிவப்புக் கொள்ளையர்கள்’ என்றே அமெரிக்கா, மேற்கு நாடுகளின் செய்தித் தாள்கள் எழுதி வந்தன.
எனவே, சீனாவின் உண்மை நிலை என்ன என்பதை அறிய விழைந்த எட்கர் சுனோ என்ற எழுத்தாளர், சீனாவுக்குச் சென்று செம்படை வீரர்களுடன் தங்கிப் பயணித்தார். அங்கே தாம் திரட்டிய செய்திகளைத் தொகுத்து நூலாக எழுதி வெளியிட்டார். சீனாவைப் பற்றி அதுவரையிலும் வெளிவராத பல செய்திகளை இந்த நூல் உலகுக்கு வெளிக்கொண்டு வந்தது. அயல்நாடுகளுக்கு மட்டும் அல்லாமல், சீனாவின் சிற்றூர்ப்புறங்களைப் பற்றிய செய்திளை அந்த நாட்டின் நகர்ப்புற மக்களுக்குக் கொண்டு சென்றதும் இந்த நூலே.
Be the first to rate this book.