சீன எழுத்துகளைப் புரிந்து கொள்வதைக் காட்டிலும் கடினமானது இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது...
கடந்த 30 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 10 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே இருந்திருக்கிறது. உலகில் இவ்வளவு அதிக வளர்ச்சியை இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து சாதித்த நாடு எதுவுமே கிடையாது. ஆனால், அந்தச் சாதனையை அது ஜனநாயக வழியில் சாதிக்கவில்லை.
சீனாவில் நிலங்கள் அரசுக்கு மட்டுமே சொந்தம். ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்க அரசாங்கம் நினைத்தால், விவசாயிகள் போட்டது போட்டபடி புறப்பட்டுப் போய்விட வேண்டியதுதான்.
‘காய்’ என்றால் சீன மொழியில் ‘கடல்’ என்று பொருள். ஷாங்காய் நகரில் கடல் உண்டு. ஆனால் கடற்கரை, மணலும் சேறுமாக இருக்கும். ஷாங்காய் நகரின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சென் லியாங்கு ஓர் உத்தரவு போட்டார். ஓரிரு மாதங்களிலேயே 1,28,000 டன் வெண் மணலைப் புறநகரில் இருந்து அள்ளிக் கொண்டுவந்து கொட்டி அழகான கடற்கரையை உருவாகிவிட்டார்கள். கடலே இல்லாமல் இருந்தாலும் அதைக் கூடக் கொண்டு வந்திருப்பார்! சீனாவில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவ்வளவு அதிகாரம்.
அபரிமிதமான வளர்ச்சி... ஆனால், அதன் பொருளாதாரம் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து திறந்த சந்தையை நோக்கிய நகர்வில் நடுவழியில் நிற்கிறது. அரசியல் சுதந்தரம் அடியோடு கிடையாது. இந்த நிலை நீண்ட நாள் நீடிக்க முடியுமா? அதுமட்டுமல்லாமல், சீனா அடைந்ததாகச் சொல்லும் வளர்ச்சி உண்மையானதுதானா? கருத்துச் சுதந்தரம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா?
சீனா பற்றிய உண்மையான மதிப்பீட்டை ஆதாரபூர்வமாக, அழுத்தமாக, தெளிவாக இந்த நூல் முன்வைக்கிறது.
Be the first to rate this book.