இந்நூலில் நீங்கள் பரதேசியுடன் சுற்றிப் பார்க்கப் போகும் முக்கிய செட்டிநாட்டுச் சுற்றுலாத்தலங்கள்:
1. மாவீர மன்னர்கள் மருது பாண்டியர் நினைவுச் சின்னம்
The Great Maruthu Pandiyar Memorial stone
2. ஸ்வீடன் மருத்துவர் கட்டிய சிவகங்கை மருத்துவமனை
Swedish Hospital of Sivaganga
3. செட்டிநாட்டின் புகழ் பெற்ற ஆயிரம் ஜன்னல் வீடு
Thousand Windows House of Chettinad
4. கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை
Chettinad Kanadukathan Palace
5. வரலாறு சொல்லும் புதுக்கோட்டை அருங்காட்சியகம்
Pudukkottai Museum
6. உலகப் புகழ் மிக்க சித்தன்ன வாசல் குகை ஓவியங்கள்
World famous Chithannavasal cave paintings
7. விஜயரகுநாத சேதுபதி கட்டிய திருமயம் கோட்டை
Thirumayam Fort
8. 150 அடி உயரமுள்ள காளையார் கோயில் சிவாலயம்
Lord Shiva Temple in Kalaiyar Kovil
9. நூற்றாண்டுப் பழமை வாய்ந்த இடைக்காட்டூர் தேவாலயம்
Sacred Heart Jesus Shrine, Idaikaattur
இவை தவிர வீரம் செறிந்த மருதுபாண்டியர்கள் மன்னரான வரலாறு, செட்டிநாடு அண்ணாமலைச் செட்டியாருக்கு அரசப் பட்டம் கிடைத்த கதை, இந்திய விடுதலைக்குப் பின்னும் ஏறத்தாழ ஓராண்டு தனிநாடாக இருந்த புதுக்கோட்டையின் வரலாறு, வெள்ளைக்காரனையே விரட்டியடித்த சிவகங்கைச் சீமை உருவான கதை என மண் மணக்கும் வரலாற்றுத் தகவல்கள்...
உலகப் புகழ் பெற்ற மானாமதுரை கடம் செய்யப்படும் தொழில்நுட்பம், வியக்க வைக்கும் சித்தன்னவாசல் குகை அனுபவங்கள், பிரெஞ்சு பாணியிலான தமிழ்நாட்டு தேவாலயத்தின் எழில் கொஞ்சும் வருணனைகள் என இதுவரை நீங்கள் அறிந்திராத பல சுவையான செய்திகள்...
அனைத்தையும் படங்களுடன் படிக்க, பார்க்க, சுவைக்க வாருங்கள் உள்ளே...
Be the first to rate this book.