இந்தப் புத்தகம் சென்னை பற்றிய பல புத்தகங்களிலிருந்து முற்றிலும் வெறுபட்டதாகும். நகரம் நிர்மாணிக்கப்பட்ட பின்னனி இதில் உள்ளது. பல பகுதி மக்களின் வருகையாலும் வாழ்வாலும் நகரம் உருவான கதை இது. மக்களுக்கான போக்குவரத்து, நீர்நிலைகள், தொழில், சேவைகள், கலை, பன்முக கலாச்சாரம் வளர்ந்த கதையும் இது. வெள்ளைக்கார ஆட்சியிலும் சுதந்திரப் போராட்ட இயக்கம் தோன்றி வளர்ந்ததிலும் அதில் வாழ்ந்த,வந்து சென்ற மக்களின் எதிரும் புதிருமான கதை. தொழிலாளர் இயக்கங்கள் உருவான கதை. இடங்கை, வலங்கை உள்ளிட்ட பல பிரச்சனைகள் உருவான கதை. சுதந்திரத்தை கொண்டாடியதும் எதிர்த்ததுமான கதை. மக்கள் ஒற்றுமையை பிரித்ததும் வளர்த்ததுமான கதை. சென்னையை உருவாக்கிய பல்வேறு கருத்தோட்டங்களையும் போக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கதை.மண்ணும் மக்களுமான சென்னையின் கதை.
Be the first to rate this book.