மெட்ராஸ் சென்னையாக மாறி நவீன நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்டாலும், அதன் வீதிகளில் இன்று பழமையின் சுவடுகள் அழுத்தமாகப் படிந்திருக்கின்றன. சென்னையில் இருக்கும் பாரம்பரிய கட்டிடங்கள் பலவும் தங்கள் நூற்றாண்டுக் கதைகளைக் காற்றின் காதுகளில் ஓயாமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இந்தியத் துணைக்கண்டத்தையே அடிமைப்படுத்த ஆங்கிலேயர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த புனித ஜார்ஜ் கோட்டையின் தாழ்வாரங்களில் இன்று நடந்து போனாலும், ஏதோ ஒரு முலையில் பிரான்சிஸ் டேவும், ஆண்ட்ரூ கோகனும் பேசிக்கொண்டிருப்பதைப் போல தோன்றுகிறது. யார் இவர்கள்?
மெட்ராஸ் தொடங்கி சென்னை வரையிலான பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கைச் செலுத்திய சாமானிய மனிதர்கள் தொடங்கி ஆகப்பெரிய ஆளுமைகள் வரை பலரைப் பற்றியும் பதிவுசெய்திருக்கும் இந்த நூலில், சென்னை நகரின் ஒவ்வொரு அங்குலமும் உருவான கதை வெகு நேர்த்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சென்னையின் பெருமைக்குரிய அடையாளங்கள் பற்றி அதிகம் அறியப்படாத, பேசப்படாத செய்திகளைக் கொண்டு சென்னையின் வரலாற்றை எழுத்தில் பதிவுசெய்திருக்கும் நூலாசிரியர் பார்த்திபன் பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியாகப் பணியாற்றியவர். சென்னை நகரின் வரலாறு குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து, தினத்தந்தி உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருபவர். சென்னை பற்றி தந்தி தொலைக்காட்சிக்காக இவர் எடுத்த ஆவணத் தொடர் பரவலான கவனத்தைப் பெற்றது.
Be the first to rate this book.