சுதந்திர இந்தியாவில் - இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், தலித், பவுத்தர் என இணைந்துவாழும் ஒரு பன்மைச் சமூகத்தில், முஸ்லிம்கள் எப்படி வாழ வேண்டும்? எதற்கு முன்னுரிமை தர வேண்டும்? எந்தெந்த பணிகளைச் செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதே ‘சென்னைப் பேருரை’ எனும் இந்நூல்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இஸ்லாமிய அறிஞர் உலகெங்கும் போற்றப்படும் மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் 1947ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் தமிழகத் தலைநகரான சென்னை மாநகரில் ஆற்றிய செழுமைமிகு பேருரைதான் இந்நூல். வரலாற்றின் முக்கியமான தருணம் ஒன்றில் ஆற்றிய, தீர்க்கதரிசனமான, வரலாற்றுச் சிறப்புமிக்க உரை இது.
பேருரை நிகழ்த்தப்பட்டு அறுபது ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டாலும், மவ்லானா இந்த உரையில் எடுத்தியம்பியுள்ள கருத்துகள் காலத்தை வென்று நின்று இன்றைய முஸ்லிம்களுக்கும் வழிகாட்டும் வல்லமை படைத்தவையாக ஜொலிக்கின்றன.
பாசிச மேகங்கள் தேசத்தைச் சுற்றிலும் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வேரூன்றி வருகின்ற இன்றையச் சூழலில் மௌலானா இயற்றித் தந்துள்ள செயல் திட்டங்கள், காலத்துக்கு இயைந்ததாகவும் முஸ்லிம்களை மட்டுமல்ல இந்த இந்திய தேசத்தையே விரல்பிடித்து விடியலை நோக்கி அழைத்துச் செல்வதாகவும் அமைந்துள்ளது.
Be the first to rate this book.