எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இயக்குநராக பணிபுரிந்த டாக்டர் ரெக்ஸ் சற்குணம் குழந்தைகள் நல மருத்துவராக இன்றுவரை பணியாற்றி வருபவர். மார்க்சிய சித்தாந்தத்தைக் கைக் கொண்டுள்ள இவர் அன்டோனியா கிராம்ஸி குறித்து இரண்டு நூல்களையும் அண்மையில் ‘சோசலிசமே எதிர்காலம்’ என்ற நூலினையும் எழுதியுள்ளார். இந்நூல் இவரின் முதலாவது நாவல் முயற்சியாகும்.
தமிழ்நாட்டின் சுயமரியாதை, சமூகநீதி அரசியல் முன்னுதாரணங்கள் தனித்த அடையாளங்களுடன் இந்நூலில் பேசப்படுகிறது. படுத்துக் கொண்டே ஜெய்ப்பேன் என்ற – காமராஜர் எனும் மாபெரும் ஆளுமை தோற்கடிக்கப்படுவதும், அண்ணாதுரை – அண்ணா எனும் குடும்ப உறவாக எழுச்சி பெறுவதன் அரசியல் நுட்பமும் நாவல் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.
Be the first to rate this book.