'ச்சீய்...' என நம் இந்தியச் சமூகத்தின் கூட்டுமனம் கூச்சப்பட்டுக் கதைக்கத் தயங்குகிற விடயங்களைப் புன்னகையுடன் அணுகிப் பார்க்கிறது இப்புத்தகம். பேசாப் பொருளைப் பேசும் துணிச்சலும் அதைச் சுவாரஸ்யமாகக் கடத்தும் திராணியும் இதில் ஜ்வலிக்கிறது! ப்ரேஸியர், காண்டம், சானிடரி நேப்கின் தொடங்கி கலவி, மலட்டுத்தன்மை, பால்வினை நோய்கள் வரை ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துக்கொண்டு ஆதியோடு அந்தமாக அவற்றின் வரலாறு, விஞ்ஞானம், வியாபாரம் என விலாவாரியாக விவரிக்கிறது! 2012 - 2013ல் 'குங்குமம்' இதழில் தொடராக வெளியாகி பரவலான வாசகக் கவனம் பெற்றது.
Be the first to rate this book.