சே நமது காலத்தின் மாவீரர்களில் தலையாய இடம் பெற்றவர். நூற்றாண்டுகளாகத் துன்பங்களை மட்டுமே சுமந்து நின்ற மக்கள் அனைவருக்கும் விடுதலை, மேம்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உறுதி செய்யும் பெரும் பயணத்தில் தன் இன்னுயிர் ஈந்தவர். சே யின் வாழ்க்கை பல அற்புதக்கூறுகளைக் கொண்டது. 1952 இல் தன் நண்பன் ஆர்பெர்டோ கிரானடோ உடன் சேர்ந்து தென் அமெரிக்காவை (லத்தீன் அமெரிக்கா) வலம் வந்தார் சே அப்பயணக்கதை மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகள் எனும் புகழ்பெற்ற நூலாக வந்துள்ளது. மறு ஆண்டே, 25 வது வயதில் லத்தீன் அமெரிக்காவின் ஊடாக அவர் மேற்கொண்ட பயணம், அதிகம் அறியப்படாத ஒன்று. இந்த நூல் அப்பயணத்தை விளக்குகிறது. பகட்டும் இறுமாப்பும் உடைய இளைஞனாகத் தமது வாழ்க்கையைத் தொடங்கிய சே எவ்வாறு நமது காலத்தின் மாபெரும் புரட்சியாளனாக மலர்ந்தார் என்பதைக் கூறுவது இந்நூலின் சிறப்பு.
Be the first to rate this book.