அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன. தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறார். இந்தப் பயணம் எர்னஸ்டோவை உலகின் முதன்மையான புரட்சியாளராக உருமாற்றியது. ஒரு தேர்ந்த மார்க்சிஸ்டாகவும், தீரமிக்கப் போராளியாகவும் வளர்த்தெடுத்தது. மக்களை நேசித்து, மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காக உயிர் துறக்கும் நெஞ்சுரத்தையும் மாண்பையும் பெற்றுத் தந்தது. எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக உருமாற்றியது. ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, சாவேஸ் வாழ்க்கை வரலாறுகளைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்க அரசியல் குறித்து மருதன் எழுதியுள்ள நன்காவது புத்தகம் இது.
Be the first to rate this book.