சு.பொ. அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர்,எழுத்தாளர். ‘சாதியம்: வேர்கள், விளைவுகள் சவால்கள்’, ‘விடுதலைத் தழும்புகள்’ உள்ளிட்ட16 நூல்களின் ஆசிரியர். தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும், மார்க்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர். "ஏன் சேவுக்கு மட்டும் இப்படி மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் பழக்கம் உள்ளது? அவன் எந்த அளவு கேவலப்படுத்தப்படுகிறானோ, சூழ்ச்சிகளில் சிக்கவைக்கப்படுகிறானோ, ஏமாற்றப்படுகிறானோ அந்த அளவு அவன் மீண்டும் வருகிறான். மற்றெவரையும் விட அவனுக்குப் பிறவிகள் அதிகம். நினைத்ததைச் சொல்வதாலா? அவன் சொன்னதைத்தான் செய்ததாலா? காலந்தோறும் போர்குணத்தின் குறியீடாக அவன் எழுகிறான் என்பதுதான். எட்வர்டோ காலினோ 'எழுதச்சலிக்காத நெருப்புவரிகள்' என்பதன் பொருளாய் இருப்பது சேகுவேராவின் வாழ்க்கை வரலாறுதான்’ என்று கூறும் நூலாசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம் ‘புதிய வாசகர்களுக்கு சேகுவேராவை உரியமுறையில் அறிமுகம் செய்யும் பணிக்கு நான் தகுந்த நியாயம் வழங்கி இருக்கிறேன்’ என்றும் உறுதி கூறுகிறார்.
Be the first to rate this book.