அல்பெர்தோ கிரனாடோ என்ற ஒரு இளம் மருத்துவரும் (சேகுவேராவின் உயிர் நண்பர், மருத்துவர்) புயேனஸ் அய்ரெஸைச் சேர்ந்த கௌரவமிக்கதொரு குடும்பத்தைச்சேர்ந்த அவரது நண்பரான 23 வயது மருத்துவ மாணவர் எர்னெஸ்டே குவேராவும் தமது கண்டத்தை (தென் அமெரிக்கா) கொர்தொபா நகரிலிருந்து 1949 ஆம் வருடத்தில் நார்டன் 500 CC மோட்டார் பைக்கில் சிலி, பெரு, கொலம்பியா மற்றும் வெனிசுவெலா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். செல்லும் வழியில் தினக்கூலிகளாக, சுமை தூக்கிகளாக, கால்பந்து பயிற்சியாளர்களாக, மருத்துவ உதவியாளர்களாக எனப் பல்வேறு வித வேலைகளை செய்தனர். தமது கண்டத்தின் பூர்வ குடிகளின் ஏழ்மையும், அவர்கள் ஏய்த்து சுரண்டப்படுவதும் அவர்களை மொத்தமாக மாற்றியது. இருவரும் தத்தமது பயணக்குறிப்புகளை எழுதுகின்றனர்.
பசிபிக் கடற்கரையை ஒட்டியுள்ள இடங்களை சுற்றிப்பார்க்கவும், நாடெங்கிலும் உள்ள தொழுநோய் மருத்துவமனைகளைக் காணவும், சேவை செய்யவும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைகளைக் கண்டு மனம் வேதனையுறுகிறார். இப்பயணமே இவர் ஒரு புரட்சியாளராக உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது.
Be the first to rate this book.