பத்தாண்டுகளில் வறுமை 70 சதத்திலிருந்து 21 சதமாகவும்,அதீத வறுமை 40 சதத்திலிருந்து 7 சதமாகவும் குறைந்துள்ளது. அங்கு எழுத்தறிவின்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழக கல்வி வரை அங்கு இலவசம்தான். இன்று மூன்றில் ஒரு வெனிசுலாக்காரர் ஏதாவது ஒரு கல்வித் திட்டத்தில் இணைந்துள்ளார். மூன்றாம் படிநிலைக் கல்வி கற்போரின் எண்ணிக்கை 2000ல் 8,95,000 ஆக இருந்தது 2011ல் 23 லட்சமாக உயர்ந்துள்ளது. 1980ல் உணவுப் பொருள் இறக்குமதி 90 சதமாக இருந்தது. இப்போது 30 சதத்திற்கும் கீழாகக் குறைந்துவிட்டது. தனிநபர் உணவு நுகர்வும் சாவேஸ் காலத்தில் இருமடங்காகிவிட்டது. 50 லட்சம் வெனிசூலர்கள் இலவச உணவு பெறுகிறார்கள். தனிநபர் உணவு நுகர்வும் சாவேஸ் காலத்தில் இருமடங்காகிவிட்டது. அதே சமயம் வரி வருவாயும் விரைவாக உயர்ந்துள்ளது. எண்ணெய் விற்பனை தொகைக்குச் சமமான அளவில் வரிவருவாயும் வருகிறது.
Be the first to rate this book.