இங்கே உடல் மயக்கத்தையும் கடந்த ஒரு
காதல்... அது நட்பென்றால் நட்பு. காதல் என்றால்
காதல். பாசம் என்றால் பாசம். புரிதல் என்றால்
புரிதல். தன்னைத் தானே தேடிச்செல்லும்
தேடல் என்றால் தேடலின் பொருள். எல்லாம்
அன்பென்கிற பதத்திற்குள் அடைக்கலம்
கொண்டுவிடுகிறது.
அவள் அவன் மீது கொண்டிருக்கிற அன்பை
மௌனத்தால், கோபத்தால், அழுகையால்
குறியீடுகளால் என்று தனதான சகல
பரிமாணங்களிலும் வெளிப்படுத்துகிறாள். ஆனால்
அத்தனை பாவங்களும், வெளிப்பாடுகளும்
அன்பினாலே மட்டுந்தான். அன்பின்
வெவ்வேறு வடிவங்களாக அவளுக்குள்தான்
எத்தனையெத்தனை உணர்வெழுச்சிகள்!
அந்த இனம்புரியாத அன்பின் ஏக்கக்குரல்....
Be the first to rate this book.