தெருக்கூத்துகளில் துவங்கி டிஜிட்டல் சினிமா வரைக்கும் வளர்ந்து நிற்கும் காட்சி ஊடகம் என்பது மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இந்தப் புத்தகம் ஒரு தேர்ந்த சினிமா கலைஞனின் கைகளால் எழுதப் படவில்லையென்பதுதான் விளிம்புநிலைக் கவலையாகக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் என்பதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
இப்புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்துமே தான்தோன்றித்தனமாக எழுதப்பட்டிருப்பவை. ஆகவே விஞ்ஞானிகள் விலகி நிற்பது சாலச் சிறந்தது. இது முற்றிலும் என்னுடைய பார்வை என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். “உன்னோட பார்வைன்னா நீயே படிக்க வேண்டியதானே?” என்று கேள்வி கேட்போர் இருந்தால் நீங்கள்தான் முதலில் இதைப் படிக்கவேண்டும். கிருத்துருவம் புடிச்சவனின் எழுத்துக்களைப் படிக்க இன்னொரு கிருத்துருவம் புடிச்சவனாலத்தான் முடியும்!
நன்றிகள் ஏசப்பா!
மாண்புமிகு கட்டுரையாளர்.
Be the first to rate this book.