எண்பதுகளின் பிற்பகுதியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் லண்டனுக்குச் செல்கிறான். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அவனது மேற்படிப்பு லண்டனில் தொடர்கிறது. அந்த இளைஞனின் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இங்கிலாந்து வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சித்தரிக்கிறது இந்நாவல்.
அவன் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சவால்கள், குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள், பண்பாட்டு முரண்கள், அவனைச் சுற்றியுள்ள தமிழ்ச் சமுதாயத்துடன் அவனது உறவு, புலம்பெயர் தேசத்தில் வாழ்வோருக்கு வரக்கூடிய அடையாளச் சிக்கல்கள் போன்றவற்றை அவ்விளைஞனே தனது பார்வையில் சொல்வதாக அமைந்துள்ளது இந்நாவல்.
Be the first to rate this book.