இந்தப் பதினைந்து கதைகளில் வருகிற சம்பவங்களும் பாத்திரங்களும் அந்தந்தக் கதைகளோடு நின்றுவிடுவது இதைக் கதைத் தொகுப்பாக ஆக்குகிறது. அநேகமாக அத்தனைக் கதைகளிலும் வருகிற ஒரு பாத்திரம், இவற்றைப் பார்த்த கேட்ட சாட்சியாக இருக்கிறது. இந்தக் கதைகளைக் கோக்கிற சரடாக அது இருப்பதால், இவை நாவலின் வெவ்வேறு அத்தியாயங்கள் என்கிற உணர்வைக் கொடுக்கிறது; வராத கதைகளிலும் இருப்பதான மாயத் தோற்றத்தை உண்டாக்குகிறது. குமாஸ்தாவில் தொடங்கி சூப்பிரெண்டண்டண்ட்டாகி ஓய்வுபெற்ற பின்னும் வந்துகொண்டிருக்கிற அந்தப் பாத்திரம், காலவரிசைப்படி இல்லாமல் வெவ்வேறு கதைகளில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பதவிகளை வகிப்பது, இந்தக் கதைகளில் பொதுவாக இருக்கிற புதிர்த் தன்மையைக் கூட்டி, குற்ற விசாரணைக் கதைகள் என்கிற இடத்திலிருந்து மனித வாழ்வின் பொருள், பொருளின்மை, மதிப்பீடுகள் பற்றிப் பரிசீலித்துக்கொள்ள வாசகனை நகர்த்துகிறது.
Be the first to rate this book.