கறுப்பர் இனமக்கள் வாழ்க்கை மேம்பாடு அடைய வேண்டும் என்ற குறிக்கோளுக்காகவே வாழ்ந்தவர். அதில் வெற்றியும் பெற்றவர். வாழ்க்கையை ஒருவித வேட்கையுடன் வாழ நினைக்கும் எவரும் கார்வரைப் போல் வாழ வேண்டும். அதற்காகவே அவரது கதையை இப்போது உங்களுக்கு அளிக்கிறோம்.
நிலக்கடலை என்னும் ஒரே ஒரு வேளாண் உற்பத்திப் பொருளில் இருந்து 300 விதமான வெவ்வேறு பயன்பாடுகளுக்கான பொருட்களைத் தயாரிக்கும் உத்திகளைக் கண்டுபிடித்தவர். இவர் கண்டுபிடித்த சாயங்களின் எண்ணிக்கை மட்டும் 536.
இவர் நினைத்திருந்தால் கோடிகளில் புரண்டிருக்கலாம். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பங்களை விலைக்கு விற்றிருந்தால் இவருக்குக் கிடைத்திருக்கக் கூடிய பொருளுக்கு அளவே இருந்திருக்காது. எனினும் இவர் தமது ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்த அத்தனை நுட்பங்களையும் யார் கேட்டாலும் கொடுத்தார்.
அவர்கள் எந்த நிறத்தைக் கொண்டவர்களாக இருந்தாலும். நிறவெறிக் கொடுமையால் ஒரு சமுதாயம் எப்படியெல்லாம் இன்னல்களுக்கு ஆளாகிறது என்பதை இவரது வாழ்க்கை நமக்கு விளக்குகிறது. கார்வர் வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தவர் அல்லர்.
நிறவெறிக் கொடுமையால் இன்னல்களை அனுபவித்து வந்த நீக்ரோ இனத்தைச் சேர்ந்தவர். அடிமையாகப் பிறந்தவர். ஆற்றல் மிக்க ஓவியராக வளர்ந்தவர். ஓவியத்தில் மட்டுமல்லாது வேளாண் அறிவியலிலும் தலைசிறந்த மேதையாகத் திகழ்ந்தவர்.
Be the first to rate this book.