மார்பகப் புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவரின் ஆரம்ப கால அச்சமும், அடுத்தடுத்த உளவியல் மாற்றங்களும் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளன. புற்றுநோய் வந்தவரின் குடும்பத்தில் ஏற்படும் உணர்ச்சிமயமான சூழல்கள், உள்ளக்குமுறல்கள், சஞ்சலங்கள், அச்சங்கள், விரக்திகள், தேறுதல்கள், நம்பிக்கையூட்டல்கள் என அனுபவங்களையும் விவரிக்கிறது.
புற்றுநோய்க்கான அறிகுறி, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிட்டு, காலம் தாழ்த்தாமல் பரிசோதனைகளை செய்துவிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தப் படுகிறது. மார்பகப் புற்றை அகற்றும்போதான மனநிலை, அறுவை சிகிச்சையின் அவசரங்கள், சிகிச்சைக்குப் பின் எச்சரிக்கைகள், உணவு முறைகள், பாதுகாப்பு முறைகள் போன்றவை விளக்கப்படுகின்றன. உடல்நலம் விரும்புவோர், குறிப்பாகப் பெண்கள் படிக்க வேண்டிய விழிப்புணர்வு நுால்
Be the first to rate this book.