ஸ்ரீராமன் கதைகள் இதுவரை நாம் அறியாத கதைப்பரப்பினைக் கொண்டிருக்கின்றன. பாண்டிச்சேரி, கடலூர், சென்னை எனத் தமிழ் வாழ்க்கையின் ஊடாகவும் ஸ்ரீராமன் கதைகள் எழுதியிருக்கிறார். குறிப்பாகப் பாண்டிச்சேரி அன்னை ஆசிரமம் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை சிறப்பானது. ஸ்ரீராமனின் கதைகள் நினைவுகளால் வழிநடத்தப்படும் மனிதர்களின் வாழ்க்கையை விவரிக்கின்றன.
கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை விஷ்ணுகுமாரன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ஸ்ரீராமனின் இரண்டு சிறுகதைகளை அரவிந்தன் திரைப்படமாக்கியிருக்கிறார். ‘வாஸ்துஹாரா’ சிறுகதையினை வாசித்துவிட்டு அதன் திரைப்படத்தையும் பாருங்கள். கதையை அரவிந்தன் படமாக்கியுள்ள நேர்த்தி புரியும். வங்க தேச அகதிகளை அந்தமானில் குடியமர்ந்தும் துறையில் ஸ்ரீராமன் அதிகாரியாகப் பணியாற்றியவர். அந்த அனுபவமே இக்கதையின் பின்புலமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கதையின் முடிவில் வங்காளப் பெண் வீட்டில் அவர் சாப்பிடும் காட்சி அபாரம். மிகவும் உணர்ச்சிகரமாக எழுதப்பட்டிருக்கிறது.
Be the first to rate this book.