தஞ்சை மாவட்ட வேளாண் மக்கள் வாழ்வியலை முழுமையாக எழுதிய முதன்மையான எழுத்தாளரான சி.எம்.முத்துவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது 54 சிறுகதைகளின் தொகுப்பு நூல்.
இன்றளவும் தஞ்சை எழுத்தாளர்கள் என்று விளிக்கப்படுகிறவர்களின் எழுத்தும் வாழ்வும் வேறு வகைப்பட்டவை, அவ்வெழுத்துகள் ரசிக்கவும் மதிக்கவுமானவை என்றாலும் அவர்களைத் தஞ்சையில் வாழ்ந்த எழுத்தாளர்கள் என்று சொல்வதே சரியானதாக இருக்கும். தஞ்சை வட்டார மக்களை எழுதிய எழுத்தாளர்கள் எனச் சொல்வதற்கு இடமில்லை. காவிரிச் சமவெளிப் பகுதி மக்களின் அசலான வாழ்வை அப்பட்டமாகப் பேசும் சி.எம்.முத்துவின் கதைகளை தமிழ்ச் சமூக ஆவண எழுத்து என வகைப்படுத்தலாம்.
Be the first to rate this book.