இதுதான் பிசினஸ், அதை இன்னின்ன வழிகளில் நடத்தினால் இன்னின்ன கிடைக்கும் என்று போதிப்பதற்கு விலையுயர்ந்த அயல்நாட்டு ஜர்னல்கள் இருக்கின்றன. சாதித்தவர்கள் எழுதி வைத்திருக்கும் சரித்திரம் மலையளவு குவிந்திருக்கிறது. கோட்பாட்டுப் புத்தகங்களுக்கும் குறைவில்லை. ஆனால் இவ்வளவையும் தேடிப் பிடித்துப் படிக்க எனக்கு அவகாசமோ பணமோ இல்லை. எனக்குத் தேவை ஒரேயொரு நூல். அதுவும் தமிழில். அதில் கோட்பாடுகளும் இருக்கவேண்டும். நடைமுறைக்கு ஒத்துவரும் விஷயங்களும் இருக்கவேண்டும். மேலைநாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளைச் சொல்லவேண்டும். ஆனால் ஒரு சொல்கூடப் புரியாததாக, கடினமானதாக இருக்கக்கூடாது. அப்படியொரு நூல் கிடைக்குமா? இதுதான் உங்கள் எதிர்பார்ப்பு என்றால் உங்களுக்கான தீர்வு இந்நூல்.
பிசினஸ் உலகம் எப்படி இயங்குகிறது? அதில் நான் எப்படி நுழைவது? என்னை மற்றவர்களிடமிருந்து எப்படி வேறுபடுத்திக் காட்டுவது? எனக்கான உத்திகள் வகுப்பது எப்படி? மார்க்கெட்டிங்குக்கும் சேல்ஸுக்கும் என்ன வேறுபாடு? இரண்டிலும் சிறந்து விளங்குவது எப்படி? மனித வளத்தைப் பயன்படுத்திக்கொள்வது எப்படி?
பிசினஸ் உலகின் முக்கியமான, அடிப்படையான சீக்ரெட்ஸ் அனைத்தையும் ஜாலியான மொழிநடையில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் நம்பர் 1 பெஸ்ட் செல்லர் நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.
Be the first to rate this book.