உலக வளங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள பர்மாவில் பிறந்தவர் தியாகராஜ். அவருடைய இளமை நினைவின் பதிவுகளாக இந்நூலில் 'மாந்தோப்பில்' குளிர் தரும் இயற்கை எழிலையும், தாக்கேட்டா தீவின் வெப்பத்தையும் வறட்சியையும் கண்டுணர முடிகிறது. அவர் சித்தரித்துள்ள பர்மிய விழாக்களில் நம்மையும் பங்கேற்கச் செய்கிறார். பௌத்த பிக்குகளின் புனித வாழ்வு, செழிப்புமிக்க பண்பாடு, பெண்களுக்கு அந்தச் சமூகம் அளித்திருக்கும் உன்னதமான இடம் ஆகியவற்றையும் இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கிறார்.
Be the first to rate this book.