கணக்கற்ற ரகசியங்களைத் தூக்கிச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தந்தைக்கும் ஒளியை நிகர்த்த வெளிப்படைத்தன்மை கொண்ட மகளுக்குமான உறவைச் சொல்கிறது இந்நாவல்.
தனது துயரத்தின் ஒரு துளியை இறக்கி வைக்கக்கூட இடமின்றிக் கதை நெடுக அலையும் நாயகி, அத்துயரங்களின் மையப்புள்ளியைக் கண்டடையும்போது அனைத்துத் தளைகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறாள். பெரும் துயரத்துக்கும் அதன் நிழல் படியாத முழு மகிழ்ச்சிக்கும் இடைப்பட்ட பெருவெளியில் மேற்கொள்ளும் பயணத்தில் அவளுக்குப் புதிர்களின் கவித்துவம் ஒரு தரிசனமாகக் கிடைக்கிறது. வாழ்வினும் பெரும் புதிர் வேறேது?
Be the first to rate this book.