கோமகட்ட மாரு பயணிகள் யாரும் அரசியல் கட்சியினர் அல்லர். கப்பலின் ஒப்பந்தக்காரரும் அரசியல் தலைவர் அல்லர். அவர்களில் பெரும்பான்மையினர் பிரிட்டிஷ் சாம் ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்துக்கு நடத்தப்பட்டப் போர்களில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் விசுவாசமிக்கப் படையினராகப் பணியாற்றியவர்கள். அவர்கள் காதுகளில் விழுந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சமநீதி மற்றும் நடுநிலைத்தவறா நேர்மை, அவர்களுக்குள் பெரும்சித்திரத்தை வரைந்திருந்தது. அவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு வேலை தேடியும் தங்கள் வாழ்வாதாரத்தை ஓரளவு மேம்படுத்திக்கொள்ளவும் போனார்கள். ஆனால் அங்கேபோனதும் அவர்கள் கனடிய குடியேற்ற ஆட்சியாளர்களால் வான்கூவர் துறைமுகத்தில் எட்டுவார காலம் மதிப்பற்றப் பொருளாக, துச்சமாக, இரக்கமற்றுக் கொடுமையாக நடத்தப்பட்டார்கள். உண்மை நிலவரம் அவர்களின் கண்களைத் திறந்து விட்டது.
வெறுக்கத்தக்க, மனிதமற்ற கொடூரச் செயல்களைச் செய்த கனடிய, பிரிட்டிஷ் ஏகாதி பத்திய மற்றும் இந்திய அரசாங்கங்கள், இந்துக்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்தி, நடைமுறை அரசியலுக்கு அவர்களைக் கொண்டுசென்று சேர்த்தன. பயணிகள், மேலே சொன்ன மூன்று அரசாங்கங்களின் கதவுகளைத் தட்டினார்கள்.
Be the first to rate this book.