ஹரண்யாவதி நதிக்கரையில் சாலா மரங்களுக்கிடையே தன் எண்பதாவது வயதில் ‘நிர்வாணம்’ அடைந்த, எல்லோருக்கும் தெரிந்த புத்தரின் வாழ்வின்மீது எதை எதையோ ஏற்றி அவருக்குப் பின்வந்தவர்களில் சிலர், தங்கள் இயல்புகளோடு புத்தரை உருவாக்கி வைத்துள்ளனர். அவற்றில் எது சரி? மகா சூன்யத்திற்கு அழைத்துச்செல்லும் ஊர்தியான சூன்ய புஷ்பத்தின்மீது அமரவைத்து, இந்நூல் முழுக்க நம்மை தெளிவைநோக்கி அழைத்துச் செல்கின்றன ஆர்தர் லில்லியின் ஆய்வுக்கண்கள். அவரது பார்வையின் துணையோடு புத்தரை மறைக்கும் தூசுகளை அகற்றி, கடவுளரைவிட கருணைமிக்க, உண்மையான, எளிய புத்தரை நாம் காண்கிறோம்.
Be the first to rate this book.