எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக் கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த எழுத்து நடைகளிலும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான எழுத்து நடைகளில் கதைகள் சீறிப் பாய்கின்றன. பித்துப்பிடித்த நிலையில் உருவாகும் பிரேக் அப்கள் அதே பித்து நிலையில் பகடியாக எழுதப்பட்டிருக்கின்றன.
*அராத்து பாண்டிச்சேரியில் பிறந்து, கடலூர் மாவட்டம் புவனகிரியில் வளர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதிவருவதன் மூலம் கவனம் பெற்றவர். நீயா நானா உட்பட்ட பல தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். விகடன், குமுதம் மற்றும் அந்திமழையில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மென்பொருள் துறையில் கன்ஸல்டிங் நிறுவனம் நடத்திவரும் இவர், தொழில்முறை எழுத்தாளர் அல்ல. பொழுதுபோக்குக்காகவும் ஜாலிக்காகவும் எழுதுபவர். இவர் இதுவரை எந்த விருதும் வாங்கியதில்லை!
Be the first to rate this book.