தமிழகத்தில் நன்கு அறியப் பெற்ற நாட்டார் வழக்காற்றியலாளரும் மார்க்சியக் கருத்துநிலையாளருமான ஆ.சிவசுப்பிரமணியன், இந்நூலில் உள்ள கட்டுரைகளில் தமிழ்க் கல்வெட்டுச் சான்றாதாரங்களைப் புதிய நோக்கில் அணுகி ஆராய்ந்துள்ளார். கல்வெட்டுகளை வழக்காறுகளாக அணுகி ஆராய்ந்து அதன்வழியாக சமூக வரலாற்றை வெளிக்கொணரும் முறையியல் ஒன்று, இந்நூல் கட்டுரைகளில் முனைப்பு பெறுகின்றது. அத்துடன் இந்நூல் ஆய்வுக் கட்டுரைகளின் வாயிலாக எடுத்துரைக்கப்படும் முடிவுகள் இடைக்காலத் தமிழ்ச் சமூகத்தில் வைதீகக் கருத்துநிலையின் உருப்பெருக்கம், சாதி உருவாக்கம் பற்றிய பல புதிய தெளிவுகளை வழங்குகின்றன.
Be the first to rate this book.