பழங்கால இந்தியாவில் பௌத்தம் மிகுந்த செல்வாக்குடன் இருந்த காலம் பற்றி ஆங்கிலத்தில் விவரிக்கும் முதல் முயற்சி, பிரிட்டிஷ் பௌத்த ஆய்வாளர் T.W. ரீஸ் டேவிட்சின் இந்த நூல்.
ஒரு வகையில் பௌத்த ஆயவுகளுக்கெல்லாம் அடித்தளம் அமைத்துக்கொடுத்த முன்னோடி நூல் என்று இதை மதிப்பிடமுடியும்.
பௌத்தம் செழிப்புற்றிருந்த பண்டைய இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக வரலாற்றை வழக்கமான பிராமணர்களின் பார்வையிலிருந்து அல்லாமல் இலக்கியம், நாணயவியல், கல்வெட்டியல் உள்ளிட்ட துறைகளிலிருந்து பெற்ற சான்றுகளின் அடிப்படையில் இந்நூல் ஆராய்கிறது.
தரவுகளற்ற இருண்ட காலமாகக் கருதப்பட்ட பண்டைய இந்தியாவின்மீது வெளிச்சம் பாய்ச்சுவதோடு சந்திரகுப்தர், அசோகர், கனிஷ்கர் போன்ற வண்ணமயமான மன்னர்களின் பௌத்தப் பங்களிப்புகளையும் முறையாக விவரிக்கிறது.
பௌத்தத்தின்மீது ஆர்வமும் பிடிப்பும் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான முக்கியமான நூல்.
Be the first to rate this book.