இந்தியாவில் பௌத்தம் அதனுடைய தொடக்கத்திலிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே ஆசியா முழுவதும் பரவி யிருக்கிறது. மேலும் தற்பொழுது அது மேற்கத்தியப் பண்பாட்டின் மீது தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த நூல், எவ்வாறு பௌத்தம் தொடங்கியது என்பதையும், எவ்வாறு அது படிப்படியாக வளர்ந்து தற்கால வடிவம் பெற்றுள்ளது என்பதையும் தெளிவான, சிக்கலற்ற மொழியில், நாட்டுப்படங்கள், வரைபடங்கள், பொருள்விளக்கப் படங்கள் ஆகியவற்றுடன் விவரிக்கிறது. அதன் மையமான போதனைகளும் நடைமுறைகளும் தெளிவுடன் முறையாக எடுத்துக்காட்டப்படுகின்றன. மேலும், கர்மாவும் மறுபிறப்பும், தியானம், அறவியல், மேற்கில் பௌத்தம் போன்ற முதன்மையான விஷயங்கள் வெவ்வேறு அத்தியாயங்களில் விவரமாக ஆராயப்படுகின்றன. முக்கியமான பிரிவுகளின் -திபெத்திய பௌத்தம், ஜென் போன்ற- தனிச் சிறப்பான கூறுகள் தெளிவாக விளக்கப்படுகின்றன.
Be the first to rate this book.