உள்மன ஆழத்தில் உறைந்து மறைந்திருக்கும் மாசுகளை வெளிக்கொணர்ந்து வேரோடு களைந்தெறியவும், உயிர் வாழ்வின் உண்மையை உள்ளது உள்ளவாறு கண்டறியவும், பிணைக்கும் தளைகளிலிருந்து பூரணமாகவும் நிரந்தரமாகவும் விடுதலை பெறவும் ஒரே வழி என்று புத்தர் தமது அனுபவத்தில் கண்டுபிடித்து உலகுக்கு அருளிய விபஸ்ஸனா தியான முறை பௌத்தத்தின் தனிச் சிறப்பாகும்.
பௌத்தம் காட்டும் அமைதித் தியானம், விபஸ்ஸனா தியானம் ஆகிய இரண்டு தியான முறைகளையும் அனைவரும் பயின்று பயன்பெறும் வகையில், விரிவாகவும் தெளிவாகவும் கூறுகின்றது இந்த நூல். உறவுகளைத் தியானிப்பது, மரணத்தைத் தியானிப்பது, சூன்யத்தைக் தியானிப்பது, பிரம்ம விஹாரங்களில் உறைதல், ட்சென் தியானம் ஆகியவையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. வாழ்வின் உன்னதக் குறிக்கோளான புத்த சித்தம் பெறுவதற்கான தியானத்தை விவரிக்கும் இந்த நூல் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய ஒன்றாகும்.
Be the first to rate this book.