அரசியல் சாக்கடை என்ற கருத்தில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. கல்வியாளர்களும்,சிந்தனையாளர்களும் அரசியலில் ஈடுபடாத காரணத்தினால் தான், கிரிமினல்களும்,ஊரை அடித்து உலையில் போடுகிற ஊழல் பேரழிவுகளும் அரசியலில் ஈடுபட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றி, ஊழலை நடைமுறையாக்கி விட்டனர். இன்னொருபுறம் திரைப்படம் என்ற போதையினால் நடிகர்களைத் தலைவர்களாகக் கருதுகின்ற போக்கு,தமிழர்களிடையில் ஆழமாக வேரூன்றி விட்டது. இத்தகைய சூழலில் தமிழர்களுக்கு விடிவு இல்லையா என்று யோசித்த நிலையில், அரசியலை முன்வைத்துக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். இன்றைய தமிழ்ச் சமூகத்தைப் பிடித்துள்ள நோயைக் கண்டறிதலும், அதற்கான தீர்வுமாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன.
Be the first to rate this book.