நவீனத் தமிழ்க் கவிதையின் இறுக்கத்தையும் உள்ளொடுங்குதலையும் தனது இசைமிகுந்த சொல்முறையால் உடைத்துத் திறந்தவர் சுகுமாரன். அது சிலசமயம் கோடையின் கொடுங்கனவு; இன்னொரு சமயம் அது காதலின் வேட்டை நிலம்; வேறொரு சமயம் தேற்றமுடியாத துயரத்தின் கேவல். தீராத வேட்கையையும் வாதையையும் இடையறாது தீண்டும் சுகுமாரனின் கவித்துவம் அவருக்குப் பின்வந்த இரண்டு தலைமுறைக் கவிஞர்களைத் தீவிரமாகப் பாதித்து வந்திருக்கிறது. நவீன வாழ்க்கை முறையின் கடும் மன இறுக்கம் கொண்ட படிமங்களை நெகிழ்வான ஒருமொழிக்கு இசையச் செய்வதன் மூலம் மிக ஆழமான அனுபவங்களை இக்கவிதைகள் தன்னியல்பாக உருவாக்குகின்றன. சுகுமாரன் 2006வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இது.
Be the first to rate this book.