அந்தரத்தில் லேசாகத் தலையைச் சாய்த்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது பூமி. ஆனால், அது சுற்றுவதைக் கொஞ்சம்கூட நம்மால் உணர முடிவதில்லை. ஏன்? அதற்கு என்ன வயது? அதைப் பற்றி யாராவது ஆய்வு செய்திருக்கிறார்களா? அப்படியே கண்டுபிடித்திருந்தாலும் இதுதான் வயது என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? அட்லஸில் பூமிப் பந்தின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் அட்சரேகை, தீர்க்க ரேகைகளைப் பார்த்திருப்போம். அந்தக் கோடுகளை எப்படிப் போட்டார்கள்? ஏன் போட்டார்கள்? அந்த ரேகைகளால் ஏதாவது பிரயோசனம் உண்டா? பூமி தோன்றியது எப்படி? அதன் வேகம் என்ன? புவியீர்ப்பு விசை என்றால் என்ன? பூமியிலேயே வாழ்ந்தாலும் பதில் தெரியாத எத்தனையோ கேள்விகள் நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அத்தனைக்கும் எளிமையாக பதில் சொல்கிறது இந்நூல்.
Be the first to rate this book.