அரசியல் குழப்பம். தனிமனித உறவுகளின் சிக்கல். பன்னாட்டு வணிக மயமாதலின் பண்பாட்டுச் சிதைவுகள். சுயமரியாதையையும், சமூகநீதியையும் சுமக்கும் கதை மாந்தர்கள். நடந்த நிகழ்வுகளினூடே, அறிந்த தலைவர்களினூடே கற்பனைப் பாத்திரங்களும் பின்னிப் பிணைந்து செல்லும் இந்த நாவல் போடும் புதிர்கள் எல்லாம் ஒவ்வொன்றாக அவிழ்ந்து விட்டாலும், நாவல் எழுப்பிச்செல்லும் கேள்விகளுக்கு விடையைத் தேடிச் சில காலமேனும் மனம் அலையும்.
- சத்யராஜ்குமார் எழுத்தாளர், வாஷிங்டன், அமெரிக்கா
துர்க்கனவுகளால் அவதியுறுபவனை சுற்றி சிலந்தி இழைகளாகக் கதை விரிகிறது. சற்றே மர்மமாக நகரும் கதையின் முடிச்சு புதுமையான முறையில் இயல்பாய் அவிழ்கிறது. இலகுவான நடையில் உள்ளிழுக்கும் ஓர் அரியவகை புனைவு மொழியில் சுவாரசியமாக நகரும் அருமையான நாவல் பூமராங்.
- ராமசந்திரன் உஷா, எழுத்தாளர்
Be the first to rate this book.