“மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே…” என்று பாடும் புறநானூறு. அப்படி ‘குறுகுறு நடந்து.. குழலையும் யாழையும் பொய்யாக்கும் செல்லக் குரலில் வேடிக்கைகள் பண்ணி மகிழ்விக்கும் குழந்தைகளைப் பாடாத கவிஞர்களோ கலைஞர்களோ இல்லை எனலாம். ஒருவகையில் கவிதை என்பதே மொழியின் குழந்தைமைதான். தயாஜியின் இந்தக் கவிதைகளைப் படிக்கையில், அல்லது பொம்மியின் ஒவ்வொரு செயல்களையும் பார்க்கையில், நாமே அந்தச் சூழலின் ஒரு அங்கமாகி விடுகிறோம். அவற்றை வெறும் செயல்கள் என்று சுருக்கி விட முடியாது, அத்தனையும் செல்லச் சாதனைகள், பேரெழில்க் குறும்புகள். உண்மையில் இது பொம்மியின் கரிசனம் மட்டுமல்லை கவிஞரின் கரிசனமும்தான். பின் பகுதிக் கவிதைகளில் ஒரு பிரிவும் சோகமும் கலந்த இழையோடுகிறது. அந்த சோகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. எல்லாம் கலந்ததுதான் வாழ்க்கை. வாழ்க்கைதான் கவிதை வழங்குகிறது அதை நமக்கு மறுபடி வழங்குவது நல்ல கவிஞனின் வேலை. அதைமிகச்சரியாகச் செய்திருக்கிறார் தயாஜி.
Be the first to rate this book.