எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் குழந்தைகளுக்காக எழுதிய முப்பத்து மூன்று கதைகளின் தொகுப்பாக ‘பொம்மைகள்’ புத்தகம் உருவாகியுள்ளது. நோயச்சப் பெருந்தொற்றுக் காலத்தில் எழுதப்பட்ட இக்கதைகள் அனைத்துமே அகமீள்கைத் தருணங்களை தன்னுள் சுமந்திருக்கின்றன. குழந்தைகள் வாசித்துக் கதையுணரும் சரளமொழிநடை இந்நூலை நிச்சயம் சிறார்களை நேசிக்க வைக்கும்.
ஒவ்வொரு கதைக்கும ஓவியர் ராஜன் அவர்கள் வரைந்தளித்த கறுப்புவெள்ளை ஓவியங்கள் கதையழகை மென்மேலும் உயிர்ப்பாக்கியுள்ளன. தன்னறம் நூல்வெளி வாயிலாக இந்நூலை வெளியிடுவதில் மிகுந்த உளநிறைவு கொள்கிறோம். இந்த நல்வாய்ப்பை அளித்த எழுத்தாளர் பவாண்ணன் அவர்களுக்கு எங்கள் பணிந்த நன்றிகளும் நிறையன்பும்!
“நான் எதிர்பார்ப்பதெல்லாம் என் களைப்புக்கு ஒரே ஒரு வாய் தண்ணீர். அது எங்காவது ஒரு இடத்தில் எனக்குக் கிடைத்தபடியேதான் இருக்கிறது. யாரோ முகம்தெரியாத ஒருவர் கொடுத்துவிட்டுச் செல்கிறார். அது போதும் எனக்கு…” என்று தன்னுடைய அகம் பகிர்கிற முன்னோடி எழுத்தாளர் பாவண்ணன் அவர்களின் புனைவும் அனுபவமும் கலந்துருவான இக்கதைகள் குழந்தைகளுக்கு பெருமகிழ்வை நிச்சயமளிக்கும்!
Be the first to rate this book.