இந்தியாவில் பள்ளிகளில் படிக்கும் அனைத்துச் சிறுவர்களையும் அழைத்து உங்களுக்குத் தெரிந்த சீனதேசத்தைச் சேர்ந்த ஒருவரது பெயரைச் சொல்லுங்கள் என்றால் அநேகமாக நூறு சதவிகிதம் பேர் யுவான் சுவாங் என்று சொல்வார்கள். யுவான் சுவாங் என்ற பாலத்தைக் கடக்காமல் நம் பள்ளிப்படிப்பை முடிக்க முடியாது. அந்த அளவுக்குப் பிரபலம். காரணம், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அவர் மேற்கொண்ட பயணம் சாகசங்கள் நிறைந்தது. நாளந்தாவுக்கும் பிற்பாடு காஞ்சிபுரத்துக்கும் அவர் வந்தது இன்றளவும் ஓர் ஆச்சர்யமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. அந்தப் பயணத்தின்போது நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு விறுவிறுப்பான நாவலை உருவாக்கி இருக்கிறார் அசோகன் நாகமுத்து. உங்கள் நூலகத்தில் அவசியம் இருக்கவேண்டிய புத்தகம் இது. புத்தகத்தைக் கையில் எடுத்தேன். இண்டர்வேல் விடாமல் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அதே அனுபவம் உங்களுக்கும் நிகழக்கூடும்.
- மதன், கார்டூனிஸ்ட் ( பின்னுரையில்)
Be the first to rate this book.