காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பெளத்த சந்நியாசியாகப் பேர் பெற்றதுடன், ஜென் பெளத்தத்தையும், குங்பூ என்கிற தற்காப்புக் கலையையும் உலகுக்குக் கற்றுத் தந்த, தமிழராகக் கருதப்படும் போதி தர்மரின் காலகட்ட அரசியலை விவரிக்கும் நாவல். பள்ளிக் கல்வித் துறையில் முதன்மைக் கல்வி அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற கயல் பரதவன், தமிழக வரலாற்றுடன், அக்காலகட்ட மக்களின் வாழ்க்கை முறை களையும் ஆராய்ந்து பல தகவல்களுடன் நாவலைக் கொண்டுசெல்கிறார். அரசியல் சூழ்ச்சிகளால் காஞ்சியிலிருந்து தப்பிச் செல்லும் இளந்திரையன் பிக்குணிகள் கூட்டத்தோடு சேர்வதும், தான் யார் என்ற அடையாளம் இல்லாமல் இருப்பதும், பின்னர் நினைவுகள் திரும்பி தனது கலைகளைப் போதிப்பதுமாகப் பல திருப்பங்களுடன் செல்கிறது. நான்கு பாகங்களும் சேர்த்து 2,800 பக்கங்களுக்கு மேல் கொண்டது.
- நீரை. மகேந்திரன்
Be the first to rate this book.