இந்நூல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த விடுதலைப் போராட்ட வரலாறு. இவ்வாறான வரலாறுகள் நமது அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கு மறைக்கப்பட்டன. பள்ளிக் கல்வி வரலாற்று புத்தகங்களில் இவை இடம் பெறுவதில்லை. கோண்ட் பழங்குடி போராளி கொமுரும் பீம் பற்றியோ, முண்டா அல்லது கோல் பழங்குடியின போராளியான பிர்சா முண்டாவை பற்றியோ அல்லது இவர்களை போன்ற பலரை பற்றியோ பாட புத்தகங்களில் எதையும் காண முடியாது.
காலங்காலமாகக் காடுகளில் வசித்து வந்த இம்மக்கள் தம் சொந்த உழைப்பில் காடு மேடுகளை விளை நிலங்களாக்கினர். தமதான விவசாய உற்பத்தி முறையை கொண்டிருந்தனர். தமதான பண்பாட்டை வளர்த்தனர். ஆங்கிலேயர் ஆட்சி சட்டங்கள் நிலங்களை பட்டா, ஜாகீர், ஜமீன் எனப் பல வகையில் தனி உடைமையாக்கி, தனி உடைமையல்லாதக் காடுகள் உள்ளிட்ட மற்ற அனைத்து நிலங்களும் அரசுடைமை என்றாக்கின. இதனால் பழங்குடி மக்களின் வாழ்வும் பண்பாடும் மிகப் பெரிய தாக்குதலுக்குள்ளாயின. இந்தத் தாக்குதலை எதிர்த்த கிளர்ச்சிகள், கலகங்கள் நாடெங்கிலும் வெடித்தன. இந்த கலகங்களும் கிளர்ச்சிகளும் முறையாகப் பதியப்படாவிட்டாலும், வரலாற்றாளர்கள் கவனத்திலிருந்து நழுவிவிட்டாலும் இவை இந்திய விடுதலை போராட்டத்தின் பகுதிகளே.
Be the first to rate this book.