சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் பெரும்பாலான கதைகள் முற்றிலும் கேரள கலாச்சாரத்தில் மட்டும் ஊன்றாமல் எந்த இந்தியக் கலாச்சாரத்துக்கும் பொருத்தமாக இருப்பதைக் காணலாம். ஏனெனில் இவை மனித வாழ்வின் பல பொதுவான அம்சங்களையும் மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் பல முரண்பாடுகளையும் இடுக்கண்களையும் கருவாகக் கொண்டிருக்கின்றன என்பதே காரணம். பல கதைகள் வாழ்வுக்கும் சாவுக்கும் உறவுகளுக்கும் துயரங்களுக்கும் இடையில் அல்லாடும் சராசரி மனிதனின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. வெறும் அதிர்ச்சி மதிப்பீடாக இல்லாமல் வாழ்க்கையின் அத்தனை வண்ணங்களையும் நெருங்கி பார்த்து காட்சிப்படுத்தும் தன்மையே இவரின் எழுத்துக்களை தனித்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது.
Be the first to rate this book.