பயாஸ்கோப் என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விடவேண்டாம் பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நூலில் 1940 தொடங்கி 1960 முடிய மொத்தம் ஐம்பது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஐம்பது திரைப்படங்களும் அப்படங்கள் வெளிவந்த காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட மாபெரும் வெற்றிப் படங்கள். இவை காலம் நமக்கு விட்டுச் சென்றிருக்கிற கொடைகள். சகுந்தலை, ஆரியமாலா முதல் களத்தூர் கண்ணமா வரை கிட்டத்தட்ட 50 படங்கள் பற்றிய குறிப்புகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
Be the first to rate this book.