இன்றைக்குக் கம்ப்யூட்டரை, செல்ஃபோனை, மின்னஞ்சலை, இணையத்தைப் பயன்படுத்துகிற எல்லாரும் ஏதோ ஒருவிதத்தில் பில் கேட்ஸுக்குக் கடமைப்பட்டவர்கள்தான். இப்போது நாம் அனுபவிக்கிற டிஜிட்டல் புரட்சிக்கான தொடக்கப்புள்ளியை அவர்தான் எழுதினார்.
இத்தனைக்கும், பில் கேட்ஸ் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கெனவே இருந்தவற்றைக் கூர்ந்து கவனித்தார், அவை எந்தத் திசையில் செல்லக்கூடும் என்று ஊகித்தார், சில நேரங்களில், அவை எப்படி மாறவேண்டும் என்று அவரே கற்பனை செய்து தீர்மானித்தார், அந்தப் பாதையில் தன்னுடைய நிறுவனத்தை வழிநடத்தினார், உலகமும் கூடவே வந்தது.
பில் கேட்ஸைப்போல் இந்தத் துறைக்குப் பங்களித்தவர்கள் மிகப் பலர் உண்டு. ஆனால், ஒரு சிறிய வட்டத்துக்குள் சுற்றிக்கொண்டிருந்த இந்தத் துறையை மிகப் பெரிய வட்டத்துக்குள் கொண்டுவந்து, பின்னர் அந்த வட்டத்துக்குள் உலகத்தையே உட்காரவைத்த சாதனை பில் கேட்ஸுடையது.
சிறந்த தொழிலதிபர், தொழில்நுட்பப் புள்ளி, சிந்தனையாளர், எழுத்தாளர், பணக்காரர், அந்தப் பணத்தில் பெரும்பகுதியை வாரி வழங்கி மகிழ்கிற மனிதர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட பில் கேட்ஸின் வாழ்க்கையை, வளர்ச்சியை, வெற்றியை, சாதனைகளை, அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்களை எளிமையாகவும் ஆதாரபூர்வமாகவும் பதில் சொல்கிறது என். சொக்கனின் இந்த நூல்.
Be the first to rate this book.