பில் கேட்ஸுக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை. தன் அறிவுப் பசிக்குத் தீனி போட புத்தகங்களை நாடினார். தொழில்நுட்பம் அவரை ஈர்த்துக்கொண்டது. கம்ப்யூட்டர் மேல் ஆர்வம் வந்தது.
பள்ளிப் படிப்பின்போதே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் அந்த முதல் முயற்சி தோல்வி அடைந்தது. பில் கேட்ஸின் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை.
கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சாஃப்ட்வேர் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு மைக்ரோசாஃப்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார் பில் கேட்ஸ். அதிலும் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சறுக்கல்கள், நஷ்டங்கள்...
கடுமையான உழைப்பும் முயற்சியும் மட்டுமே பில் கேட்ஸையும் அவருடைய நிறுவனத்தையும் நம்பர் ஒன் நிலைக்குக் கொண்டுவந்தன.
செம விறுவிறுப்பான வாழ்க்கை இது! தவறவிடாதீர்கள்!
Be the first to rate this book.