மனுஷ்ய புத்திரனின் பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் கவிதை சமூக வலைத்தளங்களில் ஒரு நவீன கவிதை ட்ரெண்டிக்காக மாறி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான முன்னுதாரணமாக அமைந்தது. ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஆங்கில மலையாள மொழிகளில் உடனடியாக மொழி பெயர்க்கப்பட்டு, சமகாலத்தின் சாடியமாக அக்கவிதை மாறியது.
இத்தொகுப்பில் உள்ள மெரினா : கலைக்க முடியாத கனவு கவிதை, ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் கூடிய மக்கள் பெருந்திரள் குறித்த ஒரு அற்புதமான சித்திரத்தை வழங்குகிறது. நவீன ஊடகவெளியினால் நம் உறவுகளில் வினோதத் திரிபுகளை ஃபேக் ஐடி குறித்த கவிதைகளில் எழுதிச் செல்கிறார். கலைஞர்களின் மரணங்கள் ஏற்படுத்தும் ஆழமான சஞ்சலங்களைப் பேசும் கவிதைகளும், இந்தக் காலகட்டத்தில் நிலவும் அரசியல் நாடகங்களையும் இத்தொகுப்பின் கவிதைகள் பேசுகின்றன. அன்பின் ரகசிய அறைகளைத் திறக்கும் கவிதைகளை இத்தொகுப்பு நெடுக காண முடிகிறது. நம் காலத்தின் அசலான குரலாக மனுஷ்ய புத்திரனின் இக்கவிதைகள் திகழ்கின்றன.
Be the first to rate this book.